பன்னடுக்கு கார் பார்க்கிங், நவீன மீன் மார்க்கெட் ரெடி... ஆனா, ரெடி இல்ல..

பன்னடுக்கு கார் பார்க்கிங், நவீன மீன் மார்க்கெட் ரெடி... ஆனா, ரெடி இல்ல..

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், திருச்சி மாநகராட்சி மேற்கொண்ட, சுமார் 62 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் முடிவடைந்தும் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் முடங்கிக் கிடப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலப்புலிவார் ரோட்டில், 20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டிருக்கும் பன்னடுக்கு வாகன நிறுத்தமும், காளியம்மன் கோவில் தெருவில் 6 கோடி ரூபாய் செலவில் காய்கறிச் சந்தையுடன் கூடிய வாகன நிறுத்தமும், கடந்த டிசம்பர் மாதத்தில் திறந்துவைக்கப்பட்டன.

இதேபோல் காந்தி மார்க்கெட் அருகேயுள்ள நவீன மீன் சந்தையும் திறந்துவைக்கப்பட்டது. ஆனால் இவை எதுவும் இதுவரையில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். கடைகளை ஏலம் விடுவதிலும், பராமரிப்பு நிறுவனத்தை இறுதி செய்வதிலும் சில பிரச்னைகள் இருப்பதால் சற்று தாமதம் ஏற்படுவதாகவும் விரைவில் இவை மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் மாநகராட்சி தரப்பில் அதிகாரிகள் தெரிவித்தனர். மக்கள் வழக்கம்போல் காத்திருக்கின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision