இரண்டு வருடம் முன்பு கட்டிய ரூ 2440 கரெண்ட் பில்லை கட்டுங்க - 'ஷாக்' கொடுத்த மின்சார வாரியம்
கொரோனா தொற்று காலத்தில் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறு குறு தொழில் நிறுவனங்கள் முதல் பெரிய தொழிற்சாலைகள் வரையிலும் சிறு நிறுவனங்கள் அதிகமானைவ ஏராளமானவை அனைத்தும் மூடக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகமானோர் வேலையை இழந்துள்ளனர். தற்பொழுது மிகுந்த பொருளாதார நெருக்கடியில் ஒவ்வொருவரும் இருக்கக்கூடிய சூழ்நிலையில் தற்போது மேலும் அவர்களுக்கு நெருக்கடி ஒன்று ஏற்பட்டுள்ளது.
கடந்த வருட கோவிட் தொற்று காலத்தில் மின்வாரிய பணியாளர்கள் கணக்கீடு பணிகளுக்காக வீடுகளுக்கு வந்து எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். தற்போது மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின் பயனீட்டை கணக்கிட ஊழியர்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை மீண்டூம் வந்து விட்டது. இந்நிலையில் மின் கணக்கீடு எவ்வளவு என்பதை பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை நேரில் சென்று மின் பயனீட்டு அட்டையில் குறிக்க சொல்லி கேட்ட பொழுது அவர்கள் குறித்து தந்த தொகை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏற்கனவே மிகுந்த பொருளாதார நெருக்கடியிலும் மன நிம்மதி இழந்து இருக்கும் பொது மக்களுக்கு மீண்டும் அதைவிட மிகப் பெரிய இடியாக 2019ஆம் ஆண்டு பயன்படுத்திய மின்சார பயனீட்டு கட்டணமாக செலுத்திய தொகையை தற்போது குறித்து இதனை கட்ட வேண்டுமென கொடுத்துள்ளனர். 2019ஆம் ஆண்டு கோடை காலத்தில் ஏசி பிரிட்ஜ் அவற்றை பயன்படுத்தி இருப்பார்கள். ஆனால் கடந்த வருடம் கோவிட் தொற்றால் யாரும் ஏசி அதிக அளவில் பயன்படுத்தவில்லை.
ஆனால் இரண்டு வருடத்திற்கு முன்னதாக பயன்படுத்திய மின்சாரத்தின் கணக்கிட்டு தற்போது மீண்டும் அதே தொகையை செலுத்த சொல்வது என்ன நியாயம் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தற்போது உள்ள மின் பயனீட்டை கணக்கிடாமல் இரண்டு வருடம் முன்பு பயன்படுத்திய மின்சார தொகையை செலுத்த வேண்டுமென குறித்து கொடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ஏராளமானோருக்கு இதேபோல் குறித்து கொடுத்துள்ளனர். ஏற்கனவே மிகுந்த பொருளாதார நெருக்கடியில் இருப்பதால் மாதமாதம் மின் இணைப்பு
கட்ட வழிகை செய்ய இதே திமுக அரசு கடந்த வருடம் கோரிக்கை வைத்தது.
தற்போது அவர்கள் ஆட்சிக்கு வந்து விட்டனர். அவர்களிடம் பொதுமக்கள் வைக்கக்கூடிய கோரிக்கை உடனடியாக மாதம் மாதம் மின் கட்டணம் செலுத்தும் திட்டத்தை கொண்டு வர வேண்டும். அதுமட்டுமில்லாமல் இரண்டு வருடத்திற்கு முன்பாக பயன்படுத்திய தொகையை தற்போது கட்ட சொல்வது என்ன நியாயம் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK