அமைதி பேச்சு வார்த்தை - 100% வாக்கு அளிக்க உறுதி

அமைதி பேச்சு வார்த்தை - 100% வாக்கு அளிக்க உறுதி

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், சோமரசம்பேட்டை பகுதி, அதவத்தூர் கிராம பஞ்சாயத்தினை திருச்சிராப்பள்ளி மாநகராட்சியுடன் இணைக்க உள்ளதாக கருதி தேர்தல் புறக்கணிப்பு அறிவிக்கப்பட்டது. இதனால் ஊர் பொதுமக்கள் சார்பாக ஏ.பனையடி மற்றும் அ.சேகர் என்பவர்களின் கடிதத்தில் மேற்படி அதவத்தூர் பஞ்சாயத்து பொதுமக்களின் உரிமைகளையும், சலுகைகளையும் பறித்து கடுமையான வரிவிதிப்பு ஏற்படுத்தி வாழ்வாதாரத்தினை சிர்குலைத்து, நிதிச்சுமையினை ஏற்படுத்தும் எனவும்,

மேலும் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் அனைவரின் வேலைவாய்ப்பு பறிபோகும் என தெரிவித்து மேற்படி கிராமத்தினை திருச்சிராப்பள்ளி மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தினை கைவிட கோரியது தொடர்பாக அதவத்தூர் கிராம பொதுமக்களை அழைத்து அமைதி பேச்சு வார்த்தை நடத்திட உத்தேசிக்கப்பட்டு, ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில், ஸ்ரீரங்கம் வருவாய் வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் விபரம் :

1. உதவி இயக்குநர், நகர் ஊரமைப்பு துறை, திருச்சிராப்பள்ளி.

2. உதவி செயற்பொறியாளர், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி

3. இளநிலை பொறியாளர், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி

4. உதவி காவல் ஆய்வாளர், சோமரசம்பேட்டை.

5.ஊர் பொதுமக்கள் சார்பாக ம.ப.சின்னதுரை, மாவட்ட தலைவர், தமிழக விவசாய சங்கம் (கட்சி சார்பற்றது), திருச்சி.

6.சுதாகர், பட்டையதாரர், அதவத்தூர்

7. கோவிந்தசாமி, பட்டையதாரர், அதவத்தூர்.

8. பளையடி, பள்ளக்காடு.

9. சேகர், பள்ளக்காடு.

10. செந்தில்குமார், பள்ளக்காடு மற்றும் 9 நபர்கள்.

11. மண்டல துணைவட்டாட்சியர், மணிகண்டம்.

12. கிராம நிர்வாக அலுவலர்கள், அதவத்தூர் கிழக்கு மற்றும் மேற்கு.

இந்த அமைதி பேச்சுவார்த்தையில் பொதுமக்கள் வைத்த கோரிக்கைகள் :

அதவத்தூர் கிராம பஞ்சாயத்தினை திருச்சிராப்பள்ளி மாநகராட்சியுடன் இணைக்க உள்ளதாக கருதி தேர்தல் புறக்கணிப்பு அறிவிக்கப்பட்டது. இந்நேர்வில் ஊர் பொதுமக்கள் சார்பாக ஏ.பனையடி மற்றும் அ.சேகர் என்பர்களின் கடிதத்தில் மேற்படி அதவத்தூர் பஞ்சாயத்து பொதுமக்களின் உரிமைகளையும், சலுகைகளையும் பறித்து கடுமையான வரிவிதிப்பு ஏற்படுத்தி வாழ்வாதாரத்தினை சீர்குலைத்து, நிதிச்சுமையினை ஏற்படுத்தும் எனவும், மேலும் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் அனைவரின் வேலைவாய்ப்பு பறிபோகும் என தெரிவித்தும், மேலும் ஏற்கனவே அதவத்தூர் கிராம பஞ்சாயத்தில் தீர்மான எண்:798-ன்படி திருச்சிராப்பள்ளி மாநகராட்சியுடன்இணைக்கக்கூடாது என தினம் வைப்பன் அடிப்படையில் பேற்படி கிராமத்தின திருச்சிராப்பள்ளி மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தினின் கையிட தெரிவிக்கப்பட்டது.

ஊரமைப்பு துறையின் மின் மேற்படி கோரிக்கைகளுக்கு உதவி இயக்குநர் நகர் ஊரமைப்பு துறை அவர்களால் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சுமார் 103 கிராம பஞ்சாயத்துகளை உள்ளுர் திட்டப்பகுதி நகர் புற விரியாக்க திட்ட அறிவிப்பு (07.02.2024) அன்று வெளியிடப்பட்டது என்றும், மேற்படி 103 கிராம பஞ்சாயத்துகளை உள்ளுர் திட்ட பருதி விரிவாக்க திட்ட அறிவிப்பிற்கும், மாநகராட்சியுடன் இணைப்பதற்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை என்றும், அதவத்தூர் பஞ்சாயத்தை மேற்படி அறிவிக்கையின் அடிப்படையில் தற்போது மாநகராட்சியுடன் இணைப்பதற்கான நடவடிக்கைக்கு சம்பந்தமில்லை எனவும், இது தொடர்பான விளக்க கடிதம் தனியாக அனுப்பி வைப்பதாக நகர் ஊரமைப்பு துறை உதவி இயக்குநரால் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கீழ்கண்டவாறு முடிவுகள் எடுக்கப்பட்டது.

மேற்படி விளக்கம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் புறக்கணிப்பை கைவிடுவதாக முடியு செய்யப்பட்டு, அனைவரும் 100% வாக்கு அளிக்க உறுதியளிக்கப்பட்டு மேற்படி அமைதி பேச்சு வார்த்தைக் கூட்டம் முற்றாக்கம் செய்யப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision