தனியார் பேருந்துக்கு அபராதம் வழக்குப்பதிவு

கொரோனா தொற்று இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இதில் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். நின்று கொண்டு செல்லும் அளவிற்கு அதிக பயணிகளை பேருந்தில் ஏற்றக் கூடாது என கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில் பேருந்துகளில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்வதாக புகார் வந்ததையடுத்து திருவரம்பூர் பேருந்து நிறுத்தத்தில் காவல் உதவி ஆய்வாளர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தஞ்சாவூரில் இருந்து திருச்சி நோக்கி வந்த தனியார் பேருந்தை நிறுத்தி சோதனை நடத்தியதில் பேருந்தில் அதிக அளவு பயணிகளை ஏற்றி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு பொது மக்கள் சுகாதார சட்டம் 1939 76 (2) பிரிவு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu