பகல் நேரங்களில் கடைவீதிக்குள் வரும் கனரக வாகனங்களுக்கு அபராதம் - திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி பேட்டி.

பகல் நேரங்களில்  கடைவீதிக்குள் வரும் கனரக வாகனங்களுக்கு அபராதம் - திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி பேட்டி.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காகவும் திருச்சி (Nscb road) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையில் தற்காலிக காவல் உதவி மையம் கட்டுப்பாட்டு அறை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்.... திருச்சி மாநகரப் பகுதிகளில் இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் பகல் நேரங்களில் சரக்குகள் ஏற்றுவது மற்றும் இறக்குவதை தவிர்த்து இரவு 11 மணிக்கு மேல் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படி பகல் நேரங்களில் என் எஸ் பி சாலை உள்ளிட்ட பொதுமக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் இயக்கப்படும் பொழுது அவர்களுக்கு அபராதம் விடுவிக்கப்படும்.

தற்காலிக சாலையோர கடைகளை மாநகராட்சி அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்து முறைப்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் பாதுகாப்பை கருதி  தங்கள் உடமைகளை குழந்தைகளையும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் அசம்பாவிதங்கள் அல்லது சந்தேகப்படும்படியான நபர்கள் பற்றி தகவல் தெரிவிக்கலாம் அது சம்பந்தமாக புகார் கொடுக்கவும் தற்காலிக தகவல் உதவி மையம் சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையங்களில் பொது அறிவிப்பு மையம் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு காவல் ஆளுநர்கள் மூலம் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தொடர்ந்து கண்காணித்து வரப்படுகிறது.

திருச்சி மாநகரில் 186 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தரைக் கடைகள் மற்றும் நடமாடும் வியாபாரிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி உடன் இணைந்து ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.தற்காலிக காவல் கண்காணிப்பு மையம் திறப்பு விழாவில் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் அன்பு, போக்குவரத்து உதவி ஆணையர்  நிக்சன் பாபு, மற்றும் நிவேதா லட்சுமி உள்ளிட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision