திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் கைது

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் கைது

புதிய வேளாண் திருத்த சட்டம், குடியுரிமை திருத்த சட்டம், சுற்றுச்சூழல் சட்டம், மின்சார சட்டம், தொழிலாளர் சட்ட திருத்தங்கள், புதிய கல்விக் கொள்கை திட்டம் உள்ளிட்ட சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்கள் மீது உபா (UAPA), NIA, 124A வால் கைது செய்யப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,

சட்டத்தை ரத்து செய்ய கோரியும், இச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட சுதா பரத்வாஜ், வரவர ராவ், ஹனி பாபு, சூசன் ஆபிரகாம், வெர்னர் கன்சால்வஸ் உள்ளிட்ட சமூகப் போராளிகளை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பினர் திருச்சி ரயில் நிலையத்தில் ரயில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக ரயில் நிலையம் அருகில் உள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில்  ரயில் நிலையத்திற்கு 300க்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்து ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். சுதந்திர தினத்தன்று எந்த ஒரு அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என்பதற்காக திருச்சி மாநகர காவல்துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ரயில் நிலையத்திற்கு முன்பு காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தினர். தொடர்ந்து ரயில் நிலையம் உள்ளே சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn