பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநருக்கான கலந்தாய்வினை உடனடியாக நடத்த மனு

பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநருக்கான கலந்தாய்வினை உடனடியாக நடத்த மனு

கடந்த 2007 முதல் 2015 வரை 8 ஆண்டுகளில் மொத்தம் 41,733 பேர் நியமனம் செய்யப்பட்டனர். அதேபோல் கடந்த 2017 முதல் 2023 வரை 8 ஆண்டுகளில் 3,447 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே 2023-2024 ஆண்டிற்கான தமிழக அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 3192 பட்டதாரி ஆசியிர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களை நிரப்புவதற்கான அறிப்பானையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்.5ம் தேதி தேர்வு நடத்தியது. மே மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகி, ஜீன் மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, ஆகஸ்ட்டில் உத்தேச தேர்வுப்பட்டியலில் இடம்பெற்று 4 மாதங்கள் ஆகியும் கலந்தாய்வு நடைபெறவில்லை.

எனவே தங்களின் வாழ்வதாரம் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிப்படைந்துள்ளது. எனவே விரைவில் கலந்தாய்வினை நடத்தி பணி நியமனம் செய்ய பள்ளிக்கல்வித்துறை முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision