உறையூர் பகுதியில் மேல்நிலைப்பள்ளி அமைத்து தர கோரி மனு

Sep 21, 2022 - 23:37
Sep 21, 2022 - 23:37
 227
உறையூர் பகுதியில் மேல்நிலைப்பள்ளி அமைத்து தர கோரி மனு

உறையூர் பகுதியில் மேல்நிலைப்பள்ளி அமைத்து தர வேண்டி அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் திருச்சி மாநகர் மாவட்டக் குழுவின் சார்பில் மாவட்டத் தலைவர் என்.எஸ்.பாட்ஷா தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.சிவா கலந்து கொண்டார்‌. மேலும் மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் க.இப்ராகிம், மேற்கு பகுதி செயலாளர் சுரேஷ் முத்துசாமி, கிழக்கு பகுதி செயலாளர் சையது அபுதாஹிர், 22 ஆவது வார்டு கிளைச் செயலாளர் நாகராஜ் பங்கேற்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO