திருச்சியில் முதலமைச்சர் பள்ளி வகுப்பறை திறக்கும் நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் முதல்வர்களின் புகைப்படம் ஒளிபரப்பு -அதிர்ச்சி

திருச்சியில் முதலமைச்சர் பள்ளி வகுப்பறை திறக்கும் நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் முதல்வர்களின் புகைப்படம் ஒளிபரப்பு -அதிர்ச்சி

திருச்சியில் முதல்வர் பள்ளி வகுப்பறை திறப்பு நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் முதல்வர்கள் புகைப்படம் ஒளிபரப்பு - அதிர்ச்சி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (22.02.2025) காலை 10.00 மணி அளவில் காணொலி காட்சி வாயிலாக காந்தி சந்தை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் குத்து விளக்கு ஏற்றி வைத்து வகுப்பறை கட்டடங்களை பார்வையிட்டார்.

காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று உள்ளே சென்று வகுப்பறையில் குத்து விளக்கு ஏற்றி வைத்து கொண்டிருந்த பொழுது வெளியில் மடிக்கணினி மூலம் ஒளிபரப்பப்பட்ட அகண்ட திரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புகைப்படங்கள் கூடிய அதிமுக ஆட்சி கால மடிக்கணினி திட்ட புகைப்படம் இதில் திரையிடப்பட்டு விட்டது. இந்த நிகழ்வு குறித்து விசாரித்த பொழுது அந்த மடிக்கணினி அதிமுக ஆட்சி காலத்தில் கொடுக்கப்பட்ட மடிக்கணினி. அதை வைத்து தனியார் ஒருவருக்கு இந்நிகழ்ச்சியை காணொலி வாயிலாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்திருந்ததால் இந்நிகழ்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிகழ்ச்சியை கடலூர் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் பெற்றோர் ஆசிரியர் கழக விழாவின் போது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக திருச்சியில் இன்று (22.02.2025)28 வகுப்பறைகளை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடதக்கது.இந்த புகைப்படம் திரையிட்ட பொழுது மேடையில் ஆட்சியர்,அதிகாரிகள்

 யாரும் இல்லை அனைவரும் பள்ளி கட்டிட வகுப்பறைக்கு உள்ளே சென்றுவிட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால் பள்ளி மாணவர்கள் முன்பாக அதிமுகவின் மடிக்கணினி திட்ட புகைப்படம் திரையில் திரையிடப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision