இரண்டாம் நிலை காவலர் பணி உடல் தகுதி தேர்வு நாளை துவக்கம்

இரண்டாம் நிலை காவலர் பணி உடல் தகுதி தேர்வு நாளை துவக்கம்

 திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்திறன் தேர்வுகள் நாளை 6.2.2023  காலை 05.30 மணிக்கு,  துவங்குகிறது. இதில் 1052 தேர்வாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். தேர்வாளர்கள் காலை 05.30 மணிக்கு ஆஐரில் இருக்கவேண்டும். உடல்திறன் தேர்வில் கலந்துகொள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் வழங்கப்பட்ட நுழைவு சீட்டு (Call Letter) கட்டாயம் எடுத்து வரவேண்டும். நுழைவுச்சீட்டு இல்லாதவர்கள் முழுவிபரங்களுடன் உடல்திறன் தேர்வில் பங்குகொள்ள ஏதாவது ஒரு அடையாள சான்று எடுத்துவரவேண்டும்.

டி-சர்ட் மற்றும் லோயர் அணிந்துவருபவர்கள், எவ்வித சாதி, மத, இன உணர்வுகளை வெளிபடுத்தும் விதமாக அணிந்து வரக்கூடாது. வேறு எந்தவிதமான குறியீடுகள், விதவிதமான வண்ணங்கள் போட்ட உடைகள் அணிந்து வரக்கூடாது.

விளையாட்டு வீரர்கள் மற்றும் முன்னாள் இராணுவத்தினர்கள் தங்களுக்குரிய ஒதுக்கீட்டு அசல் ஆவணங்களை கட்டாயம் எடுத்து வரவேண்டும். உடல்திறன் தேர்வில் ஆள்மாறாட்டம் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி வழக்கு பதிவுசெய்யப்பட்டு கடுமையான குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு நடைபெறும் இடத்தில் தனியார்உணவக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேவை உள்ளவோர் பயன்படுத்திக்கொள்ளலாம். 

உரிய நேரத்தில் தேர்விற்கு வரவேண்டும். தேவையற்ற பொருட்களை எடுத்து வரக்கூடாது.

மேற்கண்ட தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வானது, திருச்சிராப்பள்ளி மத்திய மண்டல காவல்துறை தலைவர் G.கார்த்திகேயன்,  மேற்பார்வையிலும், திருச்சிராப்பள்ளி இரயில்வே காவல் கண்காணிப்பாளர் T.செந்தில்குமார்  தலைமையிலும். 5 தினங்களுக்கு தொடர்ந்து நடைபெறும்.
இதனையொட்டி நேற்றைய தினம்
 தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெறும் இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு, மற்றும் சிறை காவலர்களுக்கான உடல் திறனறி தேர்வு திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுவதையொட்டி ரயில்வே காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார்  அண்ணா விளையாட்டு அரங்கத்தை பார்வையிட்டு தேர்வு நடைபெறும் பகுதிகளை குறிப்பிட்டு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்தார்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய
  https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5


 
#டெலிகிராம் மூலமும் அறிய....  https://t.me/trichyvisionn