மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைப்பெற  நவம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திட வேண்டும் -திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தகவல்

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைப்பெற  நவம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திட வேண்டும் -திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தகவல்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் 2005ஆம் ஆண்டு முதல் உடலியக்க குறைபாடுடையோர், கேளாத, வாய்பேச இயலாதோர். பார்வையற்றோர், குறைபாடுடையோர். மூளை முடக்குவதத்தால் பாதிக்கப்பட்டோர், மனநலம் குன்றியோர், புற அறிவுசார் உலகு சிந்தனையற்றோர் மற்றும் பல்வகை மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 

அவ்வாறு அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகல் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை (UDID- Unique Disahility ID Card) பெற்றிட தங்களது மாற்றத்திறனாளிகளுக்கான அடையான அட்டையின் அனைத்து பக்கங்களின் நகல்கள், ஆதார். அட்டை, தற்போதைய புகைப்படம், கையொப்பம் (அ) கைவிரல் ரேகை ஆகியவற்றின் ஒளி நகலுடன் இசேவை மையங்களில் இதுவரை 43663 நபர்கள் விண்ணப்பித்து அதில் சான்றுகள் சரியாக உள்ள 30764 ரயர்களுக்கு நேரடியாகவும், அஞ்சல் மூலமாகவும் அவரவர் முகவரிக்கு தனித்துவ அடையாள அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மீதம் 6785 தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பம் குறைபாடாக உள்ள விண்ணப்பதாரர்கள் வருகின்ற நவம்பர் 15ஆம் தேதிக்குள் நேரடியாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வருகை தந்து குறையாடாக விண்ணப்பிக்கப்பட்ட ஆவணங்களை சரிசெய்து, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையினைப் பெற்றுக் கொள்ளுமாறும் இதநாள்  விண்ணப்பிக்காதவர்கள் 
உடனடியாக
விண்ணப்பிக்குமாறும் 
கேட்டுக்கொள்ளப்படுகிறது.


 தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID- Unique Disability ID Card) க்கு பெற்றிட ஏற்கனவே விண்ணப்பித்து இதுவரை பெறப்படாத மாற்றுத்திறனாளிகளும், புதியதாக தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளும் உடனடியாக தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அட்டையின் கலர் நகல், ஆதார் அட்டையின் கலர் நகல். பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கண்-1 ஆகிய சான்றுகளுடன் திருச்சிராப்பள்ளி கண்டோன்மென்ட், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக பின்புறம் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு அல்லது நேரில் மாற்றுத்திறனாளிகள் வராமல் அவருடைய குடும்பத்தில் யாராவது ஒருவர் ஆவணங்களுடன் பயனடையுமாறும், இது தொடர்பான விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்-0431-2412590ல் தொடர்பு கொள்ளலாம்.

என்ற தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus