குடி போதையில் குடிமகன் ரகளை போலீஸ் 'செம கவனிப்பு'

குடி போதையில் குடிமகன் ரகளை  போலீஸ் 'செம கவனிப்பு'

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் எனக்கோரி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் மனிதநேய மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது வாலிபர் ஒருவர் குடிபோதையில் சாலையை மறித்து நின்று கொண்டிருந்தார்.

இதனைக்கண்ட போலீசார் அவரிடம் சென்று அவரை அப்புறப்படுத்த முயன்றனர். போதை ஆசாமி போலீசார் பேச்சை கேட்காததால் அவரை போலீசார் லேசாக அடித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமி சாலையில் அமர்ந்து போலீசாரை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டார். மேலும் போலீஸ் எப்படி என்னை அடிக்கலாம் என கூச்சலிட்டபடியே இருந்தார்.

இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்பிற்கு இருந்த கண்டோன்மெண்ட் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மதியழகன் உள்ளிட்ட காவலர்கள் போதை ஆசாமியை நன்றாக கவனித்து தரதரவென சாலை ஓரத்திற்கு இழுத்து வந்தனர். பின்னர் போலீஸ் வாகனத்தில் போதை ஆசாமியை ஏற்றி காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision