திருச்சியில் காவல் நலன் மையம் தொடக்கம்

திருச்சியில் காவல் நலன் மையம் தொடக்கம்

 தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் முனைவர் C.சைலேந்திரபாபு  வழிகாட்டுதலின்பேரில், திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன்,  உத்தரவின்பேரில், காவல்துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளின் நலன்பேனும் வகையில், இன்று 25.12.2022ந்தேதி திருச்சி மாநகர ஆயுதப்படையில், திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் "காவல் நலன் மையம்" தொடங்கி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர் தலைமையகம், கூடுதல் காவல் துணை ஆணையர், மாநகர ஆயுதப்படை, காவல் உதவி ஆணையர் கேகேநகர் சரகம் மற்றும் காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் காவலர் குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகள் கலந்து கொண்டார்கள்.

திருச்சி மாநகர காவல் ஆணையர், காவல்துறையை சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளின் நலன்பேனும் வகையில் தொடர்ந்து நற்செயல்கள் திருச்சி மாநகர காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் கெரோனா காலகட்டடங்களில் காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தினர்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது, கடந்த ஆண்டு காவல்துறை சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்தி, இதில் 72 நபர்கள் தேர்வு செய்யப்பட்டும், 30 பேர் திறன்பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டும், 104 பேர் அடுத்தகட்ட தேர்வுக்கும் தகுதிபெற்றனர். இன்று காவல்துறை ஆளிநர்களின் குழந்தைகள் பயன்பெறும் வகையில் "காவல் நலன் மையம்” தொடங்கப்பட்டு, நவீன தொழில்நுட்பத்துடன் (Projector உதவியுடன்) டியூசன் சென்டர் காவல் ஆணையர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் சுமார் 125 குழந்தைகள் கலந்து கொண்டனர். குழந்தைகள் பள்ளி சென்று வரும் நேரம் தவிர மற்ற நேரங்களில் இங்கு தங்களின் பாடத்திடங்களை படித்து பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் காவல் நலன் மையத்தை தொடங்கி வைத்து, பேசுகையில், இம்மையத்தில் காவல்துறை சார்பில் 2 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, தினந்தோறும் பாடத்திட்டம் மற்றும் செயல்திறனாய்வு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. குழந்தைகள் இந்த பயனுள்ள மையத்தை பயன்படுத்தி தங்களது அறிவுதிறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்கள். மேலும் காவலர்களின் நலன் மற்றும் குடும்பத்தினர் நலன்காக்கும் வகையில் இதேபோன்று நற்செயல்கள் தொடரும் என தெரிவித்து, காவலரின் குழந்தைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்கள். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகள் பேசுகையில், எங்களின் எதிர்கால நலன்கருதி இதேபோன்று முன்மாதிரியான முயற்சி பயனுள்ளதாக உள்ளது எனவும், இந்த பயனுள்ள மையத்தை தொடங்கி வைத்த திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு எங்களது நன்றிகளை தெரிவித்து கொள்வதாக கூறினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

  
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO