ஸ்ரீரங்கம் கோயில் சுவரை ஆக்கிரமித்த போஸ்டர்கள்- வரலாற்றுப் பாரம்பரியம் சிதைக்கப்படும் அபாயம்

ஸ்ரீரங்கம் கோயில் சுவரை ஆக்கிரமித்த போஸ்டர்கள்- வரலாற்றுப் பாரம்பரியம் சிதைக்கப்படும் அபாயம்

ஸ்ரீரங்கம் கோவில் சுற்றுச்சுவர் போஸ்டர்களால் ஆக்கிரமித்துள்ளதால் வரலாற்று பாரம்பரியம் சிதைக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலையில் உள்ளனர்.

திருவரங்கம் எனும் ஸ்ரீரங்கம், பூலோக வைகுந்தம் என்று போற்றப்படுவது! 108 திவ்ய ஸ்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். ஆசியாவிலேயே மிக உயர்ந்த பிரமாண்ட ராஜகோபுரம் கொண்டது ஸ்ரீரங்கம். ராமபிரான் அளித்த ஸ்ரீரங்கநாதரை விபீஷணன் இங்கே வைத்துவிட கோயில் உருவானது.

பிறகு தர்மசோழனும் கிள்ளி வளவனும் பல திருப்பணிகள் செய்து ஆலயத்தை விரிவாக்கினார்கள் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரிந்து இருக்கலாம். இங்கு ஸ்ரீரங்கநாதப் பெருமாள் 21 அடி நீளத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் எழுந்தருளி அறிதுயிலில் சேவை சாதிக்கிறார். 11 ஆழ்வார்கள் மங்களாசாசனம் பெற்று பாடிய ஒரே தலம் என்ற பெருமையைக் கொண்டது. 156 ஏக்கர் பரப்பளவில் உலகின் இரண்டாவது பெரிய ஆலயம் இதுவே. இப்படி இத்தலத்தின் பெருமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆன்மிக நோக்கத்துடன் இந்தியா மட்டுமின்றி உலகத்தின் பல இடங்களில் இருந்து ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். இதனால்தான் தமிழ் நாட்டின் முக்கியமான சுற்றுலா தளமாக ஸ்ரீரங்கம் கோவில் மாறிவருகிறது. இந்த கோவில் 21 கோபுரம் கொண்டு மிக பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ளது. ஒருநாள் முழுதும் நீங்கள் இந்த கோவிலினை சுற்றிப்பர்ப்பது கடினம்தான் அந்தளவுக்கு காண வேண்டிய காட்சிகள் அதிகளவில் இங்கு உண்டு.

போஸ்டர்களால் கோபுர கல் சுவர்கள் சிதலம் அடையும் நிலைபழைய கல்வெட்டு அழிந்து வரும் நிலையில் சுற்று சுவரிலும் பெரிய அளவில் போஸ்ட்ர் மற்றும் பிளக்ஸ் ஒட்டபடுகிறது.இதனால் ஸ்ரீரங்கத்தில் வரலாற்றுப் பாரம்பரியம் யாராலும் முழுமையாக அறிய இயலாமல் போகிறது.

இப்பகுதி சுற்றுச்சுவரில் சினிமா, அரசியல் போஸ்டர்கள் ,ரசிகர்கள் போஸ்டர்கள், திருமண போஸ்டர்கள் வரை நிரம்பி வழிகிறது. இது வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் வெளிநாட்டு உள்நாட்டு சுற்றுலா பயணிகளை முகம் சுளிக்க வைத்துள்ளது. எனவே ஸ்ரீரங்கத்தில் வரலாற்றுப் பாரம்பரியம் பாதிக்கப்படாமல் உடனடியாக காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO