பிரஸ் கிளப்புகள் பத்திரிகையாளர்களின் அறிவை பெருக்கும் பூங்காவாக செயல்பட வேண்டும் - மூத்த ஆசிரியர் விஜயசங்கர் பேச்சு

பிரஸ் கிளப்புகள் பத்திரிகையாளர்களின் அறிவை பெருக்கும் பூங்காவாக செயல்பட வேண்டும் - மூத்த ஆசிரியர் விஜயசங்கர் பேச்சு

ஊடகங்களில் பணியாற்றிவரும் பத்திரிகையாளர்களின் முயற்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது அமைப்பு, திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் & மீடியா கிளப். தொடர் முயற்சிகளுக்குப் பின்னர் இவ்வமைப்பிற்கென்று, திருச்சி மத்திய பேருந்துநிலையம் - கலையரங்கம் வளாகத்தில் அலுவலகம் புதிதாக திறந்து வைக்கபட்டது.

நவம்பர்-11 அன்று திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் & மீடியா கிளப் தலைவர் மா.செந்தமிழினியன் தலைமையில் நடைபெற்ற இப்புதிய அலுவலக திறப்பு விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக, செய்தி மக்கள் தொடர்புதுறை உதவி இயக்குநர் வ.பாலசுப்பிரமணியன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மு.சுதாகர், காவேரி மருத்துவமனையின் வசதிகள்துறை இயக்குநர் ஆர்.அன்புசெழியன் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் திருச்சி மாவட்ட நலபணிநிதிகுழு பொருளாளர் சேவை கோவிந்தராஜ் கலந்து கொண்டு வாழ்த்தி சென்றார்.

திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் & மீடியா கிளப் அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றிய மூத்த ஆசிரியர் விஜயசங்கர்... தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி வரையில் தமிழ் வழியில் பயின்று, ஆங்கில பத்திரிகையின் ஆசிரியாக உயர்வது என்பது அசாத்தியமானது. அதுவும், இந்திய பத்திரிகை துறையில் தனித்த அடையாளத்தோடு இயங்கி வரும் ப்ரண்ட்லைன் ஆங்கில பத்திரிகையில், தான் பணியாற்றிய காலத்தில் அரசியல் சூடு தணியாத பல கட்டுரைகளை, இந்திய அரசியலையும் தமிழகத்தை நோக்கி திரும்பிப்பார்க்க வைத்த பல திருப்பங்களையும் அதன் ஆசிரியராக இருந்து நிகழ்த்திக் காட்டியவர்.

தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும். இளம் பத்திரிகையாளர்களுக்கு பயிற்சியளிக்கும் இடமாக இது அமைய வேண்டும். " என்பதை அழுத்தமாக பதிவு செய்து உரையை நிறைவு செய்தார், மூத்த பத்திரிகையாளர் விஜயசங்கர். மாற்று சங்கத்தை சேர்ந்தவர்களாக இருந்த போதிலும், பத்திரிகையாளர் என்ற உணர்வோடு சில பத்திரிகையாளர்கள் பங்கேற்று, விழாவை மேலும் சிறப்பித்தார்கள்.

நபுதிய பொலிவுடன் புதிய அலுவலகத்தை கண்ட மகிழ்வை காட்டிலும், மூத்த பத்திரிகையாளர் ஆர்.விஜயசங்கரின் உரையும் அனுபவமிக்க ஆலோசனைகளும் பெருமகிழ்வையும் வந்திருந்த பத்திரிகையாளர்களிடத்தில் பரவச்செய்திருந்தது. நிறைவாக, "பிரஸ் கிளப் என்பது பொழுது போக்குவதற்கான இடமல்ல. கருத்துவேறுபாடு இருந்தாலும் ஒற்றுமையாக இருக்கும் இடமாக இருக்க வேண்டும். இந்த இடத்தை நீங்கள் நூலகமாக மாற்ற வேண்டும். முக்கியமான ஆளுமைகளை அழைத்து வந்து பல்வேறு தலைப்புகளில் பேச வைக்க வேண்டும். எப்படி செய்தி சேகரிப்பது? எப்படி செய்தியாக்குவது? எதை செய்தியாக்குவது? என்பதையெல்லாம் மூத்த பத்திரிகையாளர்கள் இளம் பத்திரிகையாளர்களுக்கு சொல்லித்தர வேண்டும்.

செய்தியாளர்கள் சந்திப்பில் டெல்லி பிரஸ் கிளப்பை சுற்ற சி.ஆர்.பி.எப். படைவீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், பிரஸ் கிளப் வளாகத்தைவிட்டு அவர்களை வெளியேறுமாறு உரக்க சொன்ன டெல்லி பிரஸ் கிளப் செயலரின் துணிச்சலை உதாரணமாக சொல்லி, "சில விசயங்களை தனி மனிதராக செய்துவிட முடியாது. நாம் ஒற்றுமையாக ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டிய தேவை இருக்கிறது" என்பதாக வலியுறுத்தினார்.

"ஊடகத்துறையில் இளம் பத்திரிகையாளர்கள் நிறைய வந்திருக்கிறார்கள். பலருக்கும் என்ன சூழலில் என்ன கேள்வி கேட்க வேண்டும் என்பதே தெரிவதில்லை. நான் பார்த்த வகையில் சிலருக்கு பொது அறிவும் இருப்பதில்லை. மொழி அறிவும் இருப்பதில்லை." என்பதாக வருத்தப்பட்டவர், இந்தக் குறையை போக்கும் வகையில், இதுபோன்ற பிரஸ் கிளப்புகள் இளம் பத்திரிகையாளர்களை ஊக்கப்படுத்தி வளர்த்தெடுக்கும் களமாக அமைய வேண்டும் என்ற அன்பான வேண்டுகோளை பத்திரிகையாளர்கள் முன்வைத்தார்.

வயது மூப்பு மற்றும் தவிர்க்கவியலாத உடல் அசௌகரியங்களையும் கடந்து, தான் பிறந்து வளர்ந்த திருச்சியில் அதுவும் தமது பத்திரிகைத்துறை நண்பர்கள் சார்பில் நிகழ்த்தப்படும் விழா என்பதால், மறுப்பேதும் சொல்லாமல் பங்கேற்று விழாவை சிறப்பித்திருந்தார் மூத்த பத்திரிகையாளர் ஆர்.விஜயசங்கர். திருச்சியில் தான் பிறந்து வளர்ந்த சூழலையும், கல்வி பயின்ற காலங்களையும் பசுமையான நினைவுகளோடு பகிர்ந்தவர், இன்றைய டிஜிட்டல் மயமான உலகில் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை சுட்டிக்காட்டி பேசினார்.

"முன்பொரு காலத்தில் இருந்ததை போலல்லாமல், மறுநாள் காலை அச்சில் வருவதற்கு முன்பாகவே டிஜிட்டல் வடிவத்தில் செய்திகள் உடனுக்குடன் வந்து விழுகிறது. உலக செய்திகளும்கூட உடனே வந்துவிடுகிறது. இவற்றில் என்ன மாற்றங்கள் வந்தாலும், இதழியலின் அடிப்படை என்றுமே மாறாது.

ஒன்று, உண்மையை சொல்வது. நம்மை சுற்றி நிகழும் அனைத்து சம்பவங்களுக்கும், சமூக அவலங்களுக்கும் நாம்தான் சாட்சியாக இருக்கிறோம். நாம்தான் அதனை முதன் முதலாக வெளிக்கொண்டு வருகிறோம். அடுத்து, செய்தியின் நம்பகத்தன்மையை உறுதி செய்தி வெளியிடுவது. இவையெல்லாம் அடிப்படையான விசயங்கள். இவை மாறாது." என்பதை அழுத்தமாக பதிவு செய்தார்.

முன்னதாக, கிளப்பின் செயலர் சார்லஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். பொருளாளர் ஞானசேகரன், துணைத்தலைவர் ராஜேஷ் கண்ணா, மூத்த பத்திரிகையாளர் ஏ.ஜே.பாஸ்கரன் அங்குசம் ஜெ.டி.ஆர். சாகுல் ஹமீது, ஆகியோர் முன்னிலை வகித்தனர். எக்ஸெல் குழுமத்தின் தலைவர் எம்.முருகானந்தம் மற்றும் மணிச்சுடர் ஆசிரியர் பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் ஆகியோர் வாழ்த்துக் கடிதங்களை அனுப்பி வைத்திருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision