ஊழியருக்கு கொரோனா தொற்று காரணமாக தனியார் வங்கி மூடல்

ஊழியருக்கு கொரோனா தொற்று காரணமாக தனியார் வங்கி மூடல்

கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது  அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும், பொது இடங்களில் அதிகம் கூட்டம் போடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் குறைந்த அளவிலான பொது மக்களை அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

இந்நிலையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள காளியம்மன் கோவில் தெருவில் உள்ள சிட்டி யூனியன் தலைமை வங்கியில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வங்கியின் முன்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இதுமட்டுமின்றி இந்த வங்கியில் உள்ள மற்ற ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. பின்னர் வங்கி நாளை மீண்டும் வழக்கம் போல் செயல்படும் என வங்கி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF