நிரந்தர ஆர்டிஓ நியமிக்ககோரி காத்திருப்பு போராட்டம்

வட்டாரப்போக்குவரத்து அலுவலர், ஆய்வாளர் இல்லாததால் ஒன்றரை மாதங்களாக பொதுமக்கள், வாகனஉரிமையாளர்கள் அலைக்கழிப்பு - நிரந்தர ஆர்டிஓ நியமிக்ககோரி பொதுமக்கள், டிரைவிங் பயிற்சிபள்ளி உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டம்.
திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள வட்டாரப்போக்குவரத்து அலுவலர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு ஒன்றரை மாதங்களாக புதிதாக அலுவலர் நியமிக்கப்படாததால் மேற்கு தொகுதிக்குட்பட்ட வட்டார அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காகவும், எல்எல்ஆர் பெறுவதற்காகவும், புதிய
வாகனங்கள் பதிவு செய்யவும், எப்சி எனப்படும் வாகன தரச்சான்றிதழ் பெறமுடியாமலும் பொதுமக்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் பரிதவித்துவருகின்றனர்.
ஆன்லைன் மூலம் போக்குவரத்துஅலுவலகத்தில் அப்பாயிண்ட்மென்ட் பெற்ற பொதுமக்களும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர் இல்லாததால் தினசரி காத்திருந்துவிட்டு செல்லவேண்டிய அவலநிலைஏற்பட்டதால், உடனடியாக நிரந்தர வட்டாரப்போக்குவரத்து அலுவலரை நியமிக்க வலியுறுத்தி டிரைவிங் பயிற்சிபள்ளி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் பிராட்டியூரில் உள்ள மேற்கு வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் தங்களை அதிகாரிகள் வந்து சந்தித்து, தீர்வுகாணாவிட்டால் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் எச்சரிக்கையுடன் தெரிவித்தனர்.
திருச்சியில் உள்ள 3ஆர்டிஓ அலுவலகத்திலும் போக்குவரத்து ஆய்வாளர்கள் இல்லையென்றும், வட்டாரப்போக்குவரத்து அலுவலரும், ஆய்வாளரும் நியமிக்கப்படாமல் செயல்பட்டுவரும் போக்குவரத்துதுறையும், தமிழக அரசும் விரைந்து மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணவேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision