திருச்சியில் 17 வாகனங்கள் பொது ஏலம் - மாநகர காவல் ஆணையர் தகவல்

திருச்சியில் 17 வாகனங்கள் பொது ஏலம் - மாநகர காவல் ஆணையர் தகவல்

திருச்சி மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரு சக்கர வாகனம் -11, மூன்று சக்கர வாகனம் -1, நான்கு சக்கர வாகனம் 5 ஆக மொத்தம் 17 வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. மேற்படி வாகனங்களின் பொது ஏலம் வருகின்ற (01.02.2025)-ம் தேதி காலை 09:30 மணியளவில் பொன்மலையில் உள்ள திருச்சி மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு வளாகத்தில் நடைபெற உள்ளது.

மேற்கண்ட வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர் வருகின்ற (01.02.2025)-ம் தேதிக்கு முன்னதாக பொன்மலை ஆர்மரிகேட் அருகில் திருச்சி மாநகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு வளாகத்தில் உள்ள ஏலம் விடப்பட உள்ள வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம். மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளான (01.02.2025)ந் தேதி காலை 09:30 மணிமுதல் தங்களது ஆதார் அட்டையுடன் ரூபாய் 2000/-முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

வாகனங்களை ஏலம் எடுத்த உடன் ஏலத்தொகையுடன் சரக்கு மற்றும் சேவை வரியாக நான்கு சக்கர வாகனத்திற்கு 18% GST தொகையையும், இரு சக்கர வாகனத்திற்கு 12% GST தொகையையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision