சாலை ரோடு மற்றும் கோட்டை ஸ்டேஷன் சாலையினை இணைக்கு இரயில்வே புதிய மேம்பாலம் - மேயர் ஆய்வு

சாலை ரோடு மற்றும் கோட்டை ஸ்டேஷன் சாலையினை இணைக்கு இரயில்வே  புதிய மேம்பாலம் - மேயர் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, சாலைரோடு மற்றும் கோட்டை ஸ்டேஷன் சாலையினை இணைக்கும் வகையில் இரயில்வே மேம்பாலம் ( மாரீஸ் தியேட்டர் பாலம்) 1866 ஆம் ஆண்டு சுண்ணாம்பு மற்றும் செங்கல் கட்டிடத்திலான வளைவு வடிவ இருபக்க நடைபாதையுடன் 9 மீ அகலமுடைய ஒரு வழி பாதையாகும்.

இரயில்வே துறையில், இப்பாலம் கட்டப்பட்டு 157 வருடம் காலம் ஆகின்றதாலும், கனரக வாகனத்திற்கு ஏற்ற வகையில் இல்லாததாலும், இப்பாலம் பழுதடைந்துள்ள காரணத்தினாலும், இரயில்வே மேம்பாலத்தினை உயரப்படுத்தியும் மற்றும் அகலப்படுத்தியும் கட்ட வேண்டியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, எதிர்கால போக்குவரத்தினை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் நலன் கருதி இரு வழிபாதையாக இப்பாலத்தினை புதிதாக கட்டுவதற்கு மதிப்பீடு ரூ.34.10 கோடி மதிப்பீட்டில் நகர் ஊரமைப்பு துறையின் உள்கட்டமைப்பு மற்றும் வசதி நிதி ( I & A Fund)ன் கீழ், நிதியுதவி பெற்று, இரயில்வே நிர்வாகமும் , மாநகராட்சியும் இணைந்து செயல்படுத்தப்படவுள்ளது.

புதிதாக கட்டப்படவுள்ள இருவழிப்பாதை இரயில்வே மேம்பாலத்தின் நீளம் 31.39 மீ, அகலம் 20.70 மீட்டர் ஆகிறது. இரயில்வே பாலத்தின் கிழக்கு பகுதியில் 223.75 மீ நீளமும், 15.61 மீட்டர் அகலம் உடையதாகவும், மேற்கு பகுதியில் 225 மீ நீளமும், 15.61 மீ அகலமுடையதாக சாலையினை தடுப்பு சுவர்களுடன் விரிவாக்கம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இப்பாலத்தினை இருவழிப்பாதையாக கட்டப்படுவதினால் மெயின்கார்டு கேட் பகுதியிலிருந்து தில்லை நகர், தென்னூர், புத்தூர் மற்றும் உறையூர் பகுதிகளுக்கு போக்குவரத்து இடையூறின்றி சுலபமாக செல்ல இயலும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision