திருச்சியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் மரணம் - அடித்து கொலையா? விசாரணை

திருச்சியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் மரணம் - அடித்து கொலையா? விசாரணை

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் கைலாஷ் நகர் பகுதியில் உடலில் காயத்துடன் கிடந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் சிகிச்சைக்கு பலன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலம் பெரியார் தெரு அம்மா குளம் பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் (50) இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார்.

இDந்த நிலையில் நேற்று முன்தினம்(10.03.2025)பொன்ராஜ் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் கைலாஷ் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்துடன் உடலில் காயத்துடன் விழுந்து கடந்துள்ளார்.பொன்ராஜ் சாலை விபத்தில் தான் காயம் அடைந்துள்ளார் என நினைத்து அப்பகுதி மக்கள் பொன்ராஜை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

 அங்கு சிகிச்சைக்கு பலன் இல்லாமல் பொன்ராஜ் பரிதாபமாக இறந்துள்ளார்.இந்த நிலையில் பொன்ராஜ் உடலில் இருந்த காயங்கள் சாலை விபத்தினால் ஏற்பட்ட காயங்கள் போல் தெரியவில்லை என்றும் அது யாரோ பொன்ராஜை அடித்து கொலை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அவரது மகன் சுந்தர்ராஜ் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்ராஜ் உண்மையில் சாலை விபத்தில் தான் இறந்தாரா அல்லது வேறு யாரேனும் அவரை அடித்து அந்தப் பகுதியில் வீசி சென்றார்களா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision