முக்கொம்பு மேலணையிலிருந்து தண்ணீர் திறப்பு - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

முக்கொம்பு மேலணையிலிருந்து  தண்ணீர் திறப்பு - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

அமராவதி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக நேற்று (13.12.2024) அமராவதி அணையிலிருந்து 36 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் திருச்சி முக்கொம்பு மேலணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் திருச்சி முக்கொம்பு மேலணைக்கு இன்று நீர் வரத்து 19,000 கன அடியாக உள்ளது. அதில் 7,000 கன அடி நீர் காவேரியிலும், 12,000 கன அடி நீர் கொள்ளிடத்திலும் திறந்து விடப்படுகிறது. மேலும் காவிரி ஆற்றில் வரும் நீர் வரத்தினை பொருத்து காவிரி மற்றும்

கொள்ளிடம் ஆறுகளில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்க கூடும் என்பதனால் காவிரி மற்றும் கொள்ளிட கரையோர மக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை ஆற்றில் ஓட்டிச்செல்லவோ வேண்டாம் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் சலவை தொழிளாலர்கள் தங்கள் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision