பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை - தாழ்தள பேருந்துகள் குறித்து பயணிகள் குமுறல் !!

பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை - தாழ்தள பேருந்துகள் குறித்து பயணிகள் குமுறல் !!

கும்பகோணம் போக்குவரத்து மண்டலத்திற்கு தமிழக அரசின் சார்பில் டீசலில் இயங்கக்கூடிய BS-4 வகையை சேர்ந்த 38 தாழ்தள பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இவற்றில் ஒன்றுகூட தேவையிருக்கும் திருச்சி மாநகருக்கு ஒதுக்கப்படவில்லை. பல வருடங்களாக தாழ்தள பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகளுக்கு இது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தாழ்தள பேருந்தை பொறுத்தவரை மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் வசதியான அணுகலாக இருக்கும். மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் சிஸ்டம் மற்றும் பணிச்சூழலியலுக்கு ஏற்ற இருக்கைகள் போன்றவை திருச்சிக்கு தாழ்தள பேருந்துகளின் தேவையை வலியுறுத்துகின்றன. ஆனால் கடந்த சில வருடங்களாகவே திருச்சிக்கு தாழ்தள பேருந்துகளை இயக்கப்படுவது இல்லை.

இதுகுறித்து அரசு போக்குவரத்து மண்டலம் திருச்சி மாநகரில் தாழ்தள பேருந்துகளை இயக்குவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்று தெரிவிக்க பெங்களூரு, சென்னை முதலான தொலைதூர நகரங்களுக்கு மட்டும் இயக்கப்படுகிறதே என பயணிகள் கேள்வி எழுப்பினர். மேலும் தமிழ்நாட்டின் மையப்பகுதியில் இருக்கும் திருச்சி மாநகருக்கு என தனியாக போக்குவரத்து மண்டலம் செயல்பட்டால் தான் தாழ்த்தள பேருந்துகள் இயக்கப்படும், அப்படி இயக்கப்படும் பட்சத்தில் மாநகருக்குள் பயணப்பட எளிதாக இருக்கும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision