கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே எஸ். கல்லுக்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் (62) என்பவர் இரண்டு ஜாதி பசுமாடு வளர்த்து வருகிறார். இந்நிலையில் அந்த பசு மாட்டிற்கு ஒரு ரூபா நாணயம் அளவிற்கு உடம்பில் தோல் கருப்பாக இருந்தது. சில  நாட்கள் கழித்து பசு மாட்டின் உடம்பில் அது காயமாக மாறியது.

அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த முருகன் சமயபுரம் கால்நடை மருத்துவரிடம் அணுகி ஆலோசனை பெற்று பின்னர், மாட்டிற்கு மருந்து செலுத்தப்பட்டு அந்த காயம் ஆறாமல் மேலும் அதிகரித்தது. கூலி தொழிலாளி முருகன் கூறுவது என்னிடம் வாழ்வாதாரமே இந்த இரண்டு பசுமாடு தான் இந்த மாட்டிற்கு இது என்ன நோய் என்று தெரியாமல் மருத்துவர்களை அணுகினால் மெத்தனமாக செயல்படுவதாக முருகன் கூறுகிறார்.

இதனை தொடர்ச்சியாக கால்நடை மருத்துவர்கள் இந்த நோய் என்ன என்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்கு என்ன மருந்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு மாவட்ட ஆட்சியர் தலையிட்டு கால்நடைகளை வரக்கூடிய நோய்களை கண்டறிந்து  அறிந்து ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரமாக திகழும் பசு மாட்டிற்கு  காப்பாற்றுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO