திருச்சி மாநகர பகுதி வீடுகளை கபளீகரம் செய்யும் கோரையாற்று வெள்ளப்பெருக்கு -96 ஆறு பேர் மீட்பு

திருச்சி மாநகர பகுதி வீடுகளை கபளீகரம் செய்யும் கோரையாற்று வெள்ளப்பெருக்கு -96 ஆறு பேர் மீட்பு

திருச்சி கோரையாற்றில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆறு கண் பாலத்தில் மழை நீர்  கரையை தொட்டு சீறிப் பாய்ந்து செல்கிறது.குழுமாயி அம்மன் கோவிலிலும் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கோரையாற்றில் வெள்ளப்பெருக்கால் காரணமாக திருச்சி மாநகர பகுதிகள் கருமண்டபம், பொன்நகர் ,வயலூர், சண்முகா நகர் ,செல்வ நகர்,லிங்க நகர் உறையூர் பாத்திமா நகர்,மேல பாண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வீடுகளில் சூழ்ந்துள்ளது. சுமார் 5,000 கன அடி நீர் கோரையாற்றில் இருந்து வெளியேறுவதாக நீர்வள ஆதாரத்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோரையாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக உறையூர் பாத்திமா நகர், மேல பாண்டமங்கலம் ,செல்வ நகர், லிங்கநகர், அரவிந்த் நகர், சீதா லட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் தொடர்ந்து மழை நீரால் சூழப்பட்டுள்ளது. கோரையாற்றில் வரும் வெள்ள நீரின் அளவும் அதிகரித்துள்ளது. நேற்று இரவு வரை 96 பேரை திருச்சி தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டுள்ளனர்.

கடந்த 15 நாட்களுக்கு மேலாக செல்வர் நகர், லிங்க நகர், அரவிந்த் நகர் பகுதியில் மழை நீரால் சூழப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோரையாற்றில் தொடர்ந்து ஏற்படும் வெள்ளப்பெருக்கு நேரடியாக இப்பகுதிகளை தான் பாதித்துள்ளது. வயதானவர்கள், பெண்கள் சிறு குழந்தைகள் இப்பகுதியில் இருந்து வெளியேறி வருகின்றனர். வாகனங்கள் அனைத்தும் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn