புதிய பொலிவுடன் காணப்படும் மாரீஸ் மேம்பாலத்தில் மீண்டும் தொடங்கிய போக்குவரத்து

புதிய பொலிவுடன் காணப்படும் மாரீஸ் மேம்பாலத்தில் மீண்டும் தொடங்கிய போக்குவரத்து

திருச்சி மெயின்கார்டு கேட்டிலிருந்து உறையூர், தில்லை நகர் பகுதியை இணைக்கும் முக்கிய பாலமாக மாரீஸ் தியேட்டர் அருகில் உள்ள ரெயில்வே மேம்பாலம் உள்ளது. கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையின் காரணமாக பாலத்தின் ஒரு பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து அந்த பாலத்தில் சில மாதங்களாக போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. மழைக்காலம் முடிந்ததும் ஏற்கனவே ஒருமுறை தற்காலிக சீரமைப்பு பணி முடிவடைந்த நிலையில் மீண்டும் வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது. இதனால் பாலத்தின் பலம் மேலும் குறைந்தது. இதனை தொடர்ந்து மாநகராட்சி சார்பில் அதனை ரூ.3 கோடி திட்ட மதிப்பீட்டில் சீரமைப்பு செய்வதற்கான பணிகள் தொடங்கி நடந்து வந்தன.

அந்த பாலத்தின் வழியாக தற்போது இரு சக்கர வாகனங்கள் மட்டும் செல்வதற்கு அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில்  நேற்று முன்தினம் இரவு புதிய தார்சாலை அமைக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. நேற்று காலை முதலே வாகனங்கள் செல்ல ஆரம்பித்தன. பண்டிகை கால கட்டத்தில் பஜார் செல்லும் மக்கள் இந்த சாலையை பயன்படுத்துவதால் சீரமைப்பு பணி விரைவாய் செய்யப்பட்டதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. அதேசமயம் பாலத்தின் வழியாக பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படாமல் உள்ளது.

ஆனால் கார்கள், இரண்டு மற்றும் மூன்று சக்கர இலகுரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் இங்கு புதிய மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என சாலை பயனீட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn