மரபு நெல் மீட்கும் பணியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வரதராசன்

மரபு நெல் மீட்கும் பணியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வரதராசன்

பெரம்பலூர் மாவட்டம் இறையூர் சர்க்கரை ஆலைக்கு பின்புறம் உள்ளது பெருமத்தூர் நல்லூர். நாலாபுறமும் ஓடைகள் பாய வளத்தால் செழித்து பள்ளக்காடு என பெயர் பெற்ற பெருமுத்தூர் நல்லூர். மண்ணிற்கு ஏற்ற பயிர் ரகங்கள் இயற்கையாகவே தோன்றி அப்பகுதியில் விளைச்சல் தந்தன. நாளடைவில் பல்வேறு காரணங்களால் அப்பகுதி சார்ந்த பயிர்கள் வழக்கொழிந்தன. 

ஓய்வு ஆசிரியர் வரதராசன், அரசு விதை வங்கிக்கு தேவையான விதைகளை தரமான முறையில் உருவாக்கி தருகின்ற பணியை செய்து வந்தார். இதனால் தொடர்ந்து உழவுத்தொழிலில் நேர்த்தியை கடைபிடித்து வந்தார். பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, செயற்கை உரங்களை தவிர்த்து வந்தவர், தற்போது முழுமையாக இயற்கை வழியில் இடுபொருட்கள் தயாரித்து பயிரிட்டு வருகின்றார். 

களர் நிலத்திற்கு கள்ளிமடையான் எனப்படும் இப்பகுதியின் நெல்ரகத்தை தற்போது விளைவித்துள்ளார். தற்போது பெய்த மழையில் மற்ற ரகங்கள் படுத்துவிட, கள்ளிமடையான் நெல்மட்டும் கல்தூணாக தாங்கி நின்றது. ஒற்றை நெல் முறையில் நாற்றுநட, குற்றுகள் வெடித்து செழித்து வளரும். வேப்பூர் பகுதியில் பல்வேறு ரகங்கள் அழிந்து போனாலும், கள்ளிமடையான் நெல்ரகம் இவற்றில் தலைமையானது. 

இவரைத்தொடர்ந்து இப்பகுதியில் மீண்டும் மரபு நெல் வகைகள் மீளும் என்ற நம்பிக்கையை விதைக்கிறார் ஓய்வு பெற்ற ஆசிரியர் வரதராசன். பெரம்பலூர் சுற்று வட்டார பகுதியில் பெருமளவு பலராலும், விளைவிக்கப்பட்ட களர்நிலத்திற்கு உரிய நெல் கள்ளிமடையான். இம்மண்ணின் அடையாளம். 

கள்ளிமடையான் விதை நெல் தொடர்புக்கு...9442552586, 8248936317
வரதராசன் ஆசிரியர் (ஓய்வு),
பெருமுத்தூர் நல்லூர், 
இறையூர், பெரம்பலூர் மாவட்டம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn