திருச்சியில் தோல் கழலை நோய் தடுப்பூசி முகாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

திருச்சியில் தோல் கழலை நோய் தடுப்பூசி முகாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

தோல் கழலை நோயானது மாட்டினங்களைத் தாக்கும் பெரியம்மை போன்ற ஒரு நச்சுயிர் நோய் ஆகும். எனவே இக்கொடிய நோயிலிருந்து தங்களுடைய கால்நடைகளை பாதுகாத்து கொள்ளும் பொருட்டு அனைத்து விவசாய பெருமக்களும் கால்நடை வளர்ப்போரும் தங்களது கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசிப் போட்டுக கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மழைக்காலம் தொடங்கவிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இத்தடுப்பூசிப் பணியானது (05.08.2024) முதல் (31.08.2024) வரை மேற்கொள்ளப்படவுள்ளது. இத்தடுப்பூசிப் பணி முகாம்கள் நடைபெறும் இடங்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பு செய்து கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்படும்.

எனவே மாவட்டத்திலுள்ள அனைத்து கால்நடைகளுக்கும் தவறாமல் தடுப்பூசிப் போட்டுக் கொண்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அனைத்து கால்நடைகளையும் இந்நோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என்றும். தங்கள் கிராமத்தை தேடிவரும் கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் கொண்ட குழுவிற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என திருச்சிராப்பள்ளி மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision