திருச்சியில் தக்காளி மற்றும் காய்கறிகள் விலை உயர்வு

திருச்சியில் தக்காளி மற்றும் காய்கறிகள் விலை உயர்வு

தமிழகத்தில் உள்ள சந்தைகளில் மீண்டும் தக்காளி விலை உயர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக திருச்சி காந்தி மார்க்கெட்டில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 1 கிலோ 15- 20 ரூபாய் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 60-70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி மட்டுமன்றி இதர காய்கறிகளும் தற்போது விலைஉயர்ந்து காணப்படுகிறது.

குறிப்பாக பீன்ஸ் 100 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 80 ரூபாய்க்கும், அவரை 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விலையேற்றத்திற்கு காய்கறிகளை பதுக்கல் செய்து விற்பனை செய்வதாகவும், இதனைத் தடுக்கவும் விலையேற்றத்தினை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும் இடைத்தரகர்களின்றி நேரடியாக விவசாயிகளிடமிருந்து அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்தால் மேலும் விலை குறையும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.co/nepIqeLanO