ஊராட்சி மன்ற தலைவர் அலட்சியத்தால் நவலூர் குட்டப்பட்டு ஊராட்சியில் தேங்கி நிற்கும் நீரால் தொற்று நோய்கள் பரவும் அபாயம்

ஊராட்சி மன்ற தலைவர் அலட்சியத்தால் நவலூர் குட்டப்பட்டு ஊராட்சியில் தேங்கி நிற்கும் நீரால் தொற்று நோய்கள் பரவும் அபாயம்

திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட வன்னாங்கோவில் எஸ்.பி.எம் நகரில் 15க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அதன் ஒரு பகுதியில் காலி நிலத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது. விஷப் பூச்சிகள், பாம்பு, ஆமை போன்ற உயிரினங்களும் அந்த நீரில் உள்ளது. இந்த நீரால் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. டெங்கு, கொரோனா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

கடந்த ஆண்டு இதே போல தேங்கி கிடந்த நீரை மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டலில் பி.டி.ஓ. அந்த நீரை அகற்றி மக்களுக்கு உதவி செய்துள்ளனர். இப்போது மீண்டும் இந்த நீர் தேங்கி இருப்பதால் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் எத்தனையோ முறை எடுத்து கூறியுள்ளனர்.

அவரோ நடப்பது எங்களின் ஆட்சி, சென்ற முறை நடந்தது போல் அதிகாரிகள் கூட உங்களுக்கு உதவ முடியாது. அமைச்சரே கூறினாலும் நான் நினைக்கும் போது தான் நடக்கும் என்று மக்களிடம் பேசியுள்ளது மக்கள் மனதில் ஆச்சிரியத்தை உருவாக்கி உள்ளது. இது குறித்து பகுதி மக்களிடம் கேட்கும் போது.. இப்போது உள்ள முதலமைச்சர் மீது நாங்கள் மதிப்பும் எதிர்பார்ப்பும் வைத்துள்ளோம்.

இவரை போன்ற ஒரு சிலரின் நடவடிக்கைகள் இந்த ஆட்சி மீது கலங்கத்தையும் எங்கள் மனதில் கசப்பையும் ஏற்படுத்தியுள்ளது என தங்களின் மன குமுறல்களை தெரிவிக்கிறார்கள். ஊராட்சி மற்றும் கிராமங்களின் வளர்ச்சியில் பெரும் ஆர்வம் காட்டும் இன்றைய‌‌ முதலமைச்சர்‌ அவர்களின் ஆட்சியில் இப்படி ஒரு ஊராட்சி தலைவரா?

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn