திருச்சியில் 14ஆண்டுகளாக சர்வீஸ் ரோடு போடாததால் சாலை மறியல் - கைது

திருச்சியில் 14ஆண்டுகளாக சர்வீஸ் ரோடு போடாததால் சாலை மறியல் - கைதுதிருச்சி பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான 14.5 கிலோமீட்டர் தொலைவிற்கு கடந்த 2010 ஆம் ஆண்டு சர்வீஸ் சாலை ஏற்படுத்தப்படாமல் நான்குவழி சாலை அமைக்கப்பட்டத
பெல் நிறுவனம், துப்பாக்கி தொழிற்சாலை, எச்ஏபிபி போன்ற மத்திய அரசு நிறுவனங்களும், என்ஐடி தொழில்நுட்பக் கல்லூரி சிப்காட் போன்ற பல்வேறு பகுதி விட்டுச் செல்ல பிரதான சாலையாக உள்ள திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ்சாலை அமைக்காமல் 4500க்கும் மேற்பட்ட விபத்துகளால் 1500க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தியும் சர்வீஸ்சாலை அமைக்காமல் தமிழக அரசு மெத்தனம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
சர்வீஸ் சாலை மீட்பு கூட்டமைப்பினர், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தொடர்போராட்டங்களை நடத்தியநிலையில், 45 மீட்டர் அகலம் உள்ள சர்வீஸ் சாலையை 33 மீட்டராக குறைத்து மேலும் உயிர்ப்பலி ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் பிரமாணம் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.சர்வீஸ் சாலை அமைக்காமல் மக்கள் உயிருடன் விளையாடும் தமிழக அரசையும், தொகுதி அமைச்சருமான பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சர்வீஸ்ரோடு மீட்பு கூட்டமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் காட்டூர் கைலாஷ் நகர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சர்வீஸ் சாலை கோரி நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால் திருச்சி - தஞ்சை தேசியநெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அருகில் இருந்த திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். மேலும் இப்போராட்டம் தொடர்பாக திருச்சி வருவாய் கோட்டாசியர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னதாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தால் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision