கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்!

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்!

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பாக இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

சாலைப் பணியாளர்களின் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாமல் உள்ள கோரிக்கைகளான 41 மாதம் பணி நீக்கம் காலத்தை பணிக்காலமாக அறிவிப்பது, தர ஊதியம் 1900 ரூபாயாக உயர்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை முதலமைச்சருக்கு பரிந்துரை செய்திட மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

இதில் திருச்சி தஞ்சாவூர் புதுக்கோட்டை திருவாரூர் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள சாலை பணியாளர்கள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வருகின்ற 26 ஆம் தேதி கோரிக்கைகளை நிறைவேற்ற சிறப்பு மாநாடு சேலத்தில் நடத்த உள்ளதாகவும், இதில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும் இதில் இச்சங்கத்தின் கோட்டத்தலைவர்கள் சரவணன், நாகராஜ், செங்குட்டுவன், சடையப்பன், திருச்சி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாநில தலைவர் சண்முகராஜா, மாநில பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.