மணப்பாறை அருகே 70 சவரன் நகை ரூபாய் 2 லட்சம் இருக்கும் கொள்ளை.

மணப்பாறை அருகே  70 சவரன் நகை ரூபாய் 2 லட்சம் இருக்கும் கொள்ளை.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கருமலையைச் சேர்ந்தவர் சண்முக சுந்தர் ராஜா பெருமாள் (54). இவர் புத்தாநத்தத்தில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவர் மைசூருக்கு (திருமண நாளையொட்டி) குடும்பத்துடன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்று  சென்றிருந்த நிலையில், கருமலையில் உள்ள வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 70 சவரன் தங்க நகை, ரூபாய் 2 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்,

தகவல் அறிந்து வந்த மணப்பாறை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமநாதன், ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் திருட்டு நடைபெற்ற வீட்டிற்கு சென்று தடையங்களை சேகரித்தனர். கைரேகை நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளையர்கள் மோப்ப நாய் கவனத்தை திசை திருப்பும் வகையில் மிளகாய் பொடி தூவி சென்றுள்ளனர்.

மேலும் கொள்ளை போன பொருட்களின் மதிப்பு இதைவிட கூடுதலாக இருக்குமா? என வெளியூர் சென்றிருந்தவர்கள் வீட்டுக்கு வந்த நிலையில் தான் தெரியவரும் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn