பட்டப்பகலில் திருச்சி சிக்னலில் அரிவாளை காட்டி மிரட்டி ரூபாய் 37 லட்சம் கொள்ளை
திருச்சி காந்தி மார்க்கெட்டில் கேடிஎம் மளிகை கடையில் உள்ளது. இக்கடையின் உரிமையாளர் மளிகை கடையில் பொருட்கள் விற்ற ரூபாய் 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தனது டிரைவர் சசிகுமார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஷாஜகான் உடன் வங்கியில் செலுத்த அனுப்பி உள்ளார்.
இருவரும் திருச்சி தலைமை தபால் நிலையம் சிக்னல் அருகே ஆட்டோவில் நின்று கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் பணத்தை கொடுக்க சொல்லி அரிவாள் காட்டி மிரட்டி உள்ளனர். அவர்கள் கொடுக்க முடியாது என கூறியவுடன் இரண்டு சக்கர வாகனத்தில் இருந்து இறங்கி வந்த ஒருவர் பணத்தை பறிக்கும் முற்பட்ட பொழுது ஷாஜகான் (ஆட்டோ ஒட்டுநர்) பணத்தை தூக்கிக்கொண்டு ஓடி உள்ளார்.
அரிவாள் வைத்திருந்த நபர் ஷாஜகான் கையில் வெட்டி விட்டு பணத்தை பறித்துக் கொண்டு ஓடினார். மீண்டும் ஷாஜகான் ஆட்டோவை எடுத்துக் கொண்டு அவர்களை விரட்டிய போது இருவரும் தப்பிவிட்டனர். இதுகுறித்து கண்ட்டோன்மென்ட் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மளிகை கடையிலிருந்து பணம் எடுத்து வந்தது இவர்கள் அனைத்தையும் ஃபாலோ செய்து திட்டமிட்டு இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
மளிகை கடையில் வேலை பார்ப்பவர்கள் அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision