திருச்சி மலைக்கோட்டைக்கு ரோப் கார்? - அமைச்சர் திடீர் தகவல்
சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தபோது..... திமுக அரசு பொறுப்பேற்ற 20 மாத காலத்தில் 407 கோயில்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது. வருகிற பிப்ரவரி 24ஆம் தேதிக்குள் மேலும் 34 திருக்கோயில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
பிரசித்திப் பெற்ற பழனி திருக்கோயில் கும்பாபிஷேத்துக்காக, 47 ஆயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். 6000 பேர் மட்டுமே ஒட்டு மொத்தமாக அமர முடியும். அவ்வளவு தான் அங்கு இடம் இருக்கிறது. இதில், 2,000 பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும், ஆகம விதிப்படி தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் பழனி கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும். குடமுழுக்கு காலை நடைபெறும் நேரத்தில் மூலவர் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என குறிப்பிட்டார்.
எனக்கோ, எனது உறவினருக்கோ சென்னை துறைமுகத்தில் இடம் இருக்கிறது என்று பாஜக தலைவர் அண்ணாமலை நிருபிக்க தயாரா என்றார். சென்னை துறைமுக பகுதியில் தனக்கு கட்டிடம் இருப்பதாக கூறி இருக்கும் அண்ணாமலை இதுவரை எந்த ஆதார பதிலையும் தெரிவிக்கவில்லை. இன்று (23.01.2023) காலையில் திருச்சியில் பேட்டி அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பஜ்ஜி போண்டா முறுக்கிற்க்கு உண்டியல் பணத்தில் அதிகாரிகள் எடுப்பதாக கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆதாரங்களை கொடுக்க வேண்டும்.
நானோ அல்லது அறநிலையத்துறையோ தனிப்பட்ட முறையிலோ யாருக்காவது சாதகமாக செயல்பட்டிருந்தால் அதனை நிரூபியுங்கள். நான் தலை குனிந்து அதற்கு பதில் அளிக்கிறேன். ஆதாரம் இல்லாத தகவல்களை தெரிவிக்க வேண்டாம் என்றார். அறநிலையை துறையின் சொத்து இறையன்பர்களுக்கும் இறைவனுக்கும் மட்டுமே என குறிப்பிட்டார். திருச்செந்தூரில், 5,309 மாடுகள் மாயமான விவகாரம் கடந்த, 2007ம் ஆண்டு வெளியான தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்டது. அதற்கும் தற்போதைய திமுக ஆட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இதுகுறித்து நேற்றே நான் விளக்கமாக பதில் அளித்து விட்டேன். தேவையில்லாமல் 'அரசியல் ஸ்டண்ட்' அடிக்கிறார் அண்ணாமலை என பதிலளித்தார். மேலும் செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்தவர்..... திருச்சி மலைக்கோட்டைக்கு ரோப்கார் அமைக்கும் திட்டம் என்பது, போதுமான இடமில்லாததால் சாத்தியமில்லாதாக இருக்கிறது. அதற்கு மாற்றாக லிப்ட் அமைக்கலாமா? என்ற ஒரு மாற்றுத் திட்டத்தையும் பரிசீலனை செய்து வருகிறோம்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn