இளம் பெண்ணிடமிருந்து மாயமான செல்போனை ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்த எஸ்.ஐ

இளம் பெண்ணிடமிருந்து மாயமான செல்போனை ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்த எஸ்.ஐ

 திருச்சி திருவெறும்பூர் அருகே துவாக்குடி முத்துராமலிங்க தேவர் சாலையைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் சங்கவி (26). இவர் அண்ணாவளைவு பகுதியில் பூ வாங்க சென்றபோது இவரது செல்போன் மாயமானது. இதுகுறித்து சங்கவி துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.அதன் அடிப்படையில் துவாக்குடி சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மனு ரசீது வழங்கி மாயமான செல்போனைத் தேடி வந்தார். இந்நிலையில், செல்போன் மாயமான பகுதியில் டவர் லொகேஷனை வைத்து தேடியபோது அண்ணாவளைவு பகுதியிலேயே விநாயகர் கோயில் குப்பைப் பகுதியில் கிடந்தது

இதனைத் தொடர்ந்து செல்போனைக் கைப்பற்றிய நாகராஜன்  சங்கவியிடம் ஒப்படைத்தார். செல்போன் மாயமாகி ஒருமணி நேரத்திலேயே கண்டுபிடித்து செல்போனை பறிகொடுத்த இளம் பெண்ணிடம் ஒப்படைத்ததை கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் எஸ்.ஐ நாகராஜனை பாராட்டி வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision