திருச்சியில் எஸ்.எஸ் ஹரிஷ் நினைவு நெட்பால் போட்டி - 10 அணிகள் பங்கேற்பு!

திருச்சியில் எஸ்.எஸ் ஹரிஷ் நினைவு நெட்பால் போட்டி - 10 அணிகள் பங்கேற்பு!

எஸ்.எஸ்.ஹரிஷ் நினைவு நெட்பால் சாம்பியன்ஷிப் டிராபி 2020, திருச்சி திருவெறும்பூர் அருகே பாய்லர் பிளான்ட் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமீபத்தில் நடைபெற்றது.

Advertisement

திருச்சி மாவட்ட அளவில் எஸ்.எஸ் ஹரிஸ் நினைவு நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் திருச்சியில் உள்ள நெட்பால் கிளப் சார்பாக ஆண்கள் மற்றும் பெண்கள் என மொத்தம் 10 அணியினர் பங்கேற்றனர். 

இப்போட்டியின் எஸ்.எஸ் ஹாரிஸ் என்பவர் நெட் பாலுக்காக தமிழகத்திலிருந்து சென்று பல பயிற்சிகளையும், வெளிநாடுகளில் நெட்பால் குறித்து ஆய்வுகளும், தொடர்ந்து நெட் பால் பற்றய ஆர்வமுள்ளவர். கடந்த வருடம் இதே மாதம் திருச்சியில் நடைபெற்ற நெட்பால் போட்டியில் பங்கேற்று விட்டு இரவு வீட்டில் மரணமடைந்தார். 

Advertisement

அவரின் நினைவாக தான் இந்த எஸ்.எஸ் ஹரிஷ் நினைவு நெட்பால் போட்டி அதே மைதானத்தில் திருச்சியில் நடைபெற்றது. இந்த நெட்பால் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஹரிஷ் மெமோரியல் கிளப் முதலிடத்தையும், பெண்கள் பிரிவில் பாய்லர் நெர்பல் கிளப் முதல் இடத்தையும் பிடித்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியினை தமிழ்நாடு நெட் பால் அசோசியேஷன் தலைவர் ராஜ் திருவேங்கடம், தமிழ்நாடு நெட் பால் அசோசியேஷன் செயலாளர் பாண்டியன், தமிழ்நாடு நெட் பால் அசோசியேஷன் பொருளாளர் P.கண்ணன், திருச்சி நெட்பால் அசோசியேஷன் தலைவர் முருகன், திருச்சி நெட்பால் அசோசியேஷன் துணைசெயலாளர் பிரகாஷ் மற்றும் திருச்சி நெட்பால் அசோசியேஷன் சேர்மன் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO