நடைபாதை வியாபாரிகளுக்கான விற்பனை குழு தேதி அறிவிப்பு!!
2014ஆம் வருடம் நடைபாதை வியாபாரிகளுக்கான ஒழுங்கமைவு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த அதிகாரபூர்வ உத்தரவின் படி, ஒவ்வொரு மாநிலமும் இந்த உத்தரவிற்கு ஒப்புதல் அளித்து தங்கள் மாநிலத்தில் உள்ள மாநகரட்சி நிர்வாகம் மூலம் நடைபாதை வியாபாரிகளுக்கான ஒழுங்கமைவு குழுக்களை அமைக்கவேண்டும் என்பது வழிமுறை. இதற்காக நடைபாதை வியாபாரிகளின் கணக்கு எடுக்கப்பட்டது.
திருச்சியை பொறுத்தவரை சென்ற வருடமே சென்னையை சேர்ந்த நிறுவனம் மூலம் மேற்கொண்ட கணக்கெடுப்பில் 5231 பேர் என்று கணக்கெடுக்கப்பட்டு, பல்வேறு காரணங்களால் விடுபட்டவர்கள் என்று தற்போது 989 வியாபாரிகள் சேர்க்கப்பட்டு மொத்தமாக 6220 வியாபாரிகள் உள்ளனர் என்று கணக்கெடுத்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் எங்குமே இதுவரை விற்பனை குழு அமைக்கப்படாத நிலையில், திருச்சியில் விற்பனை குழுவின் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் 22ஆம் தேதி நடப்பதற்கான பணிகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது. நடைபாதை வியாபாரிகளுக்கான பிரதிநிதிகள் 6 பேரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடக்கவுள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்புமனு படிவங்கள், நவம்பர் 4ம் தேதி முதல், மாநகராட்சி முதன்மை அலுவலகத்தில் வினியோகம் செய்யப்படவுள்ளது, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நவம்பர் 11ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும், நவம்பர் 14ஆம் தேதி இறுதிப்பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
தேர்ந்தெடுக்கப்படும் நடைபாதை வியாபாரிகள் குழுவினர், நடைபாதை வியாபாரிகளுக்கு என தனி இடங்கள் ஒதுக்கப்படும், இதனால் எந்த பிரச்னையுமின்றி வியாபாரம் செய்யமுடியும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கான அரசு நிர்ணயித்த தொகையை மட்டும் செலுத்தினால் போதுமானதாக இருக்கும். மாநகராட்சிக்கு இதன்மூலம் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்களுக்கு இடர்பாடுகள் ஏற்படுவது குறையும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision