சமயபுரம் ராஜகோபுர கும்பாபிஷேகம் நாளை(06.07.2022) காலை 6 மணி முதல் உங்கள் திருச்சி விஷனில் நேரலை
அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி ஆகும். அதன்படி இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. கோவிலின் முன் பகுதியான கிழக்குப் பக்கத்தில் 101 அடி உயரத்தில் ராஜகோபுரம் கட்டுவதற்காக ரூபாய் இரண்டரை கோடியில் நிதி ஒதுக்கப்பட்டு முன்னதாக 27 அடி உயரத்தில் கல்காரம் கட்டும் பணி நடந்து முடிந்தது.
மேலும் கோவிலின் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டன. இந்தநிலையில் ராஜகோபுரம் கட்டும் பணி மேலும் கால தாமதமாகும் என்பதால் முதல் கட்டமாக வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கட்டிமுடிக்கப்பட்ட கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் 2017ம் ஆண்டு நடைபெற்றது.இதனைத்தொடர்ந்து 74 அடி உயரத்தில் 7 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி நடைபெற்று முடிவடைந்தது.
ராஜகோபுரத்தில் மொத்தம் 324 சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 6.45 மணிக்கு ராஜகோபுரத்திற்க்கு திருக்குடமுழுக்கு நடத்தப்படும் என சமயபுரம் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கும்பாபிஷேக நிகழ்வுகளை உங்கள் திருச்சி விஷனில் யூடீயூப் முகநூலில் நேரடியாக காலை 6 மணி முதல் கண்டுகளிக்கலாம்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய... https://t.co/nepIqeLanO