கொள்ளிடம் ஆறு - பெருவளை வாய்க்காலில் மணல் திருட்டு

கொள்ளிடம் ஆறு - பெருவளை வாய்க்காலில் மணல் திருட்டு

திருச்சி மாவட்டம் வாத்தலை காவல் சரகத்திற்கு உட்பட்ட துடையூர், முக்கொம்பு நடுக்கரை மற்றும் சிறுகாம்பூர் பெருவளை வாய்க்கால், வண்ணாந்துரை படிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மணல் திருட்டு அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

இந்த மணல் கடத்தல் நள்ளிரவில் நடைபெறுகிறது. இந்த கடத்தலில் 20-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர் . இதில் ஈடுபடுபவர்கள் சாக்குபைகளில் மணல் அள்ளி மோட்டார் சைக்கிள் மூலம் கடத்தலில் ஈடுபடுகிறார்கள். இந்த மணலை மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்திலும், வீடுகளிலும் சேமிக்கின்றனர்.

தொடர்ந்து அங்கிருந்து மாட்டு வண்டி, மினி லாரி மூலம் வெளியூர், வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மணல் கடத்தல் சம்பவத்தில் அப்பாவிகள் மீதுதான் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. பெரிய அளவில் கடத்துபவர்கள், தொடர்ந்து கடத்தலில் ஈடுபடுகின்றனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

எனவே மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீதும், அதற்கு துணை போகும் மீதும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision