சுகாதார சீர்கேடு - அலட்சியம் காட்டும் ஊராட்சி நிர்வாகம்
திருச்சி மாவட்டம் குடமுருட்டி அடுத்த கம்பரசம் பேட்டை கணபதி நகர் 3-வது கிராஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முறையாக சாக்கடையில் செல்லாமல் தெருக்களில் ஆறு போல வெளியேறி வருகிறது. இதனால் துர்நாற்றமும், கொசு உற்பத்தியும் அதிகமாகி உள்ளது. மேலும் தொற்று நோய் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இது மட்டுமின்றி அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கொட்டப்படும் குப்பைகள் சாலை ஓரத்தில் குவிந்து கிடக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இது மட்டுமின்றி மாடு ஆடு போன்ற கால்நடைகள் அங்கு குப்பையில் உள்ள பொருட்களை உண்பதோடு பிளாஸ்டிக் உண்டு உயிரிழக்க கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் குறித்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இங்கு உள்ள குப்பைகள் அகற்றாமலும், கழிவுநீர் சாலையில் வருவதை தடுக்காமல் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இந்த மோசமான சூழ்நிலையால் தொற்று நோய் பரவி உயிரிழப்புகள் ஏற்படும் முன் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision