கழிவுநீர் தேங்குவதால் அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு

கழிவுநீர் தேங்குவதால் அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு

 திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சித்தா பிரிவிற்கு அருகேயும், மத்திய நுண் தொற்று நீக்கும் மையத்திற்கு எதிரிலும், மின்சாரம் மற்றும் ஜெனரேட்டர் அறை வாசலில் உள்ள பகுதிகளில் திறந்தவெளியில் கழிவு நீர் குளமாக தேங்கி காணப்படுகிறது.

பல நாட்களாகியும் அகற்றப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயமும் உள்ளது.பொதுமக்கள், நோயாளிகள் மட்டுமின்றி, அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision