திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில் துப்புரவு பணியாளர்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில் துப்புரவு பணியாளர்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை உள்ளிட்ட ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு வார்டு பணிகள் நடைபெற்ற வருகிறது. இதனிடையே திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 5 மண்டலங்களில் 1700 சுய உதவிக் குழுவினர் தூய்மை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

தற்போது புதிதாக ஒப்பந்தம் எடுத்துள்ள வேதா என்ற நிறுவனம் 1200 தூய்மை பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதனால் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் அன்றாடம் நடைபெறும் தூய்மை பணிகள் பெரிதும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் வருகைக்காக கடந்த 25ம் தேதி முதல் 15 தினங்களாக வேலை பார்த்து வந்த தூய்மை பணியாளர்களுக்கும் மாநகராட்சி மற்றும் ஒப்பந்த நிறுவனம் ஊதியம் வழங்கவில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கொரோனா காலம் முதல் தற்போது வரை தொடர்ந்து தூய்மை பணியில் தங்களை அர்ப்பணித்து பணியாற்றிவரும் தூய்மை பணியாளர்களை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நீக்கம் செய்ததை கண்டித்து இன்றைய தினம் 200க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் திருச்சி - தஞ்சை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுமட்டுமன்றி கடந்த காலங்களில் போராடி பெற்ற 575 ரூபாய் என்ற சம்பளத்தை குறைத்து 500 ரூபாய் மட்டுமே ஒப்பந்ததாரர்கள் வழங்குவதாகவும் குற்றம்சாட்டினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn