சங்கரையா பிறந்த தினம் - ஒரு லட்சம் உறுப்பினர் பதிவு தொடக்கம்

சங்கரையா பிறந்த தினம் - ஒரு லட்சம் உறுப்பினர் பதிவு தொடக்கம்

ஜீலை 15 சுதந்திர போராட்ட தியாகியுகம், இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் தகைசால் தமிழர் தோழர் சங்கரையா பிறந்த தினத்தில் இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் உறுப்பினர் பதிவு துவங்கியது. அதன் ஒரு பகுதியாக திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரியில் உறுப்பினர் பதிவை மாவட்ட தலைவர் சூரியா துவக்கி வைத்தார்.

திருச்சி புறநகர் துவாக்குடி அரசு கலை கல்லூரியில் மாநில துணை செயலாளர் ஜி.கே.மோகன் துவக்கி வைத்தார். திருச்சிராப்பள்ளி அரசு சட்டக்கல்லூரியில் கிளை செயலாளர் அபிராமியின், தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில குழு உறுப்பினர் மாரியம்மாள் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஹரி பிரசாத், ஆர்த்தி, சுதேசனா, ஸ்ரீநாத், கவின் ஆதித்யா, விக்னேஷ் திருச்சி புறநகர் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட தலைவர் வைரவளவன் மாவட்ட செயலாளர் ஆமோஸ் கிளை நிர்வாகிகள் கௌதம், அர்ஜுன், எழில், துளசிதாஸ், மாதவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision