சப்தரிஷீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம்

சப்தரிஷீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருள்மிகு சப்தரீஸ்வரர் கோயில் திருத்தவத்துறை என்னும் லால்குடியில் அமைந்துள்ளது. இக்கோயில் எழு முனிவர்களுக்கு அருள் செய்ததால் பெருமானுக்கு சப்தரீஸ்வரர் என்றும், இத்திருத்தவத்துறை லால்குடி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் பங்குனித் தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற விழா மார்ச் 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இரவு சோமாஸ்கந்தர் புறப்பாடும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மார்ச் 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை தினசரி காலை பல்லாக்கு புறப்பாடும், தினசரி இரவு 7 மணிக்கு அம்மன் பல்வேறு வாகனங்களில் புறப்பாடும், திருவீதி உலாவும் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான விழாவின் 9 ம் நாளான நேற்று கலை நயமிக்க 75 அடி உயரமுள்ள மிகப் பழமையான மரத்தாலான தேரில் சுவாமி எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது.

தேரோடத்தில் கோவில் இணை ஆணையர் லட்சுமணன், ஒன்றிய சேர்மன் ரவிச்சந்திரன், லால்குடி நகராட்சி ஆணையர் குமார், லால்குடி நகர்மன்ற தலைவர் துரை மாணிக்கம் மற்றும் லால்குடி சுற்றியுள்ள அனைத்து பொதுமக்களும் பக்தர்களும் சிவசிவா என்ற கோஷத்துடன் திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் நித்யா மற்றும் கோயில் பணியாளர்கள் பக்தர்கள் செய்திருந்தனர்.தேரோட்டத்தில் லால்குடி காவல்துறையினர், மகளிர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision