திருச்சியில் அனுமதி பெறாமல் இயங்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆலைகளுக்கு சீல்! பொதுப்பணித் துறையினர் அதிரடி!!

திருச்சியில் அனுமதி பெறாமல் இயங்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆலைகளுக்கு சீல்! பொதுப்பணித் துறையினர் அதிரடி!!

அனுமதி இன்றி இயங்கும் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளில் உள்ள ஆழ்குழாய்களுக்கு சீல் வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து,

திருச்சி மாவட்டத்தில் 23 இடங்களில் இயங்கிவரும் அனுமதி பெறாத சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆலைகளில் உள்ள ஆழ்குழாய்களுக்கு சீல் வைக்க பொதுப்பணித் துறையின் நிலத்தடி நீரியல் பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, துறையூர், மன்னச்சநல்லூர், முசிறி, லால்குடி ஆகிய தாலுகாக்களில் இயங்கிவரும் அனுமதி பெறாத குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளில் உள்ள ஆழ்குழாய்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

பொதுப்பணித்துறையின் நிலத்தடி நீரியல் பிரிவு செயற்பொறியாளர் சி.டி. சண்முகம், உதவி இயக்குனர் ஜெ.பாலமுருகன், உதவி பொறியாளர் துர்கா, உதவி நிலவியலாளர் கணேசன் ஆகியோர் தலைமையில் நான்கு குழுக்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.