நிரந்தர மக்கள் நீதிமன்றத்திலேயே பொது பயன்பாடு குறித்த வழக்குகளுக்கு தீர்வு

நிரந்தர மக்கள் நீதிமன்றத்திலேயே பொது பயன்பாடு குறித்த வழக்குகளுக்கு தீர்வு

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும், மாவட்ட நீதிபதியை தலைவராகவும், இரண்டு நபர்களை உறுப்பினராகும் கொண்டு நிரந்தர மக்கள் நீதிமன்றம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் நிரந்தர மக்கள் நீதிமன்றம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பழைய நீதிமன்ற கட்டிடத்தில் எல்லா நீதிமன்ற வேலை நாட்களிலும் செயல்பட்டு வருகிறது. இந்த நிரந்தர மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட நீதிபதி தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் பொது பயன்பாடு (public Utility services) சம்பந்தமான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு சமரசமாக தேர்வு செய்து கொடுக்கப்படும்.

இரு தரப்பிற்கும் சமரசம் ஏற்படாத பட்சம் சட்டத்திற்குட்பட்ட உரிய உத்தரவு பிறப்பித்து உரிய தீர்வு செய்து கொடுக்கப்படும். நீர்வழி, ஆகாய வழி, தரைவழி பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து தொடர்புடைய பிரச்சினைகள், குடிநீர் வழங்கல் சம்பந்தமான பிரச்சினைகள், மின்சாரத் துறை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், துப்புரவு பணி ரீதியாக ஏற்படும் பிரச்சினைகள்

மருத்துவமனை மற்றும் மருத்துவ துறை சம்பந்தமான சேவைகள், காப்பீடு சம்பந்தமான சேவைகள், வீடு மற்றும் வீட்டு மனை ரியல் எஸ்டேட் தொடர்பான சேவைகள் ஆகியவற்றில் உள்ள பிரச்சினைகள் மற்றும் சேவை குறைபாடுகள் தொடர்பான புகார்களை நிரந்தர மக்கள் நீதிமன்றம் முன்பு நேரடியாகசமர்ப்பித்து  மற்ற நீதிமன்றங்களை அணுகாமலே சமரசமாக அல்லது உரிய உத்தரவு பெற்று தீர்வு செய்து கொள்ளலாம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY