திருச்சி மாநகர காவல்துறையில் புதிதாக சேர்ந்த 'சிலம்பு'

திருச்சி மாநகர காவல்துறையில் புதிதாக சேர்ந்த 'சிலம்பு'

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தமிழக காவல்துறையில் புதிதாக மோப்ப நாய்கள் சேர்க்க உத்தரவிட்டதன் பெயரில் 35 மோப்ப நாய்கள் வாங்கப்பட்டுள்ளது. இது திருச்சி காவல்துறைக்கு நார் Narcotic Dog மோப்ப நாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 இன்று (21. 0 3. 2025) முதல் திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி நான் காமினி அவர்கள் முன்னிலையில் திருச்சி மாநகர மோப்ப நாய் படை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகர காவல் துறைக்கு புதிதாக வழங்கப்பட்ட Belgian Mailnoia என்ற இனத்தைச் சேர்ந்த மோப்ப நாய்க்கு சிலம்பு என்று பெயர் இடப்பட்டுள்ளது. மேற்படி மோப்ப நாய்க்கு வருகின்ற ஜூன் முதல் நவம்பர் வரை கோயம்புத்தூர் பயிற்சி மையத்தில் ஆறு மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பயிற்சி முடிந்த பின்பு திருச்சி மாநகரில் மோப்பனாய் படை பிரிவில் சேர்க்கப்பட்டு போதை பொருட்களை பதுக்கி  வைக்கப்பட்ட இடங்களை கண்டுபிடிக்க காவல்துறைக்கு உதவிடவும், மாநகரில் போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தப்பட பயன்படுத்தப்பட உள்ளது. என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision