ஒற்றுமை மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி

ஒற்றுமை மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி

நாட்டின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தியும், போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாவட்டம் துவாக்குடியில், தேசிய அளவில் வெற்றி பெற்ற ரோலர் ஸ்கேட்டிங் வீரர்களின் பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியானது துவாக்குடி அண்ணா வளைவில் தொடங்கி சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சென்று வாழவந்தான் கோட்டையில் நிறைவடைந்தது. பேரணியின் போது 30க்கும் மேற்பட்ட ரோலர் ஸ்கேட்டிங் வீரர்கள் கையில் தேசிய கொடியை ஏந்தி வந்தே மாதரம் என கோஷமிட்டு பேரணியாக வந்தனர்.

பேரணி நிறைவடைந்தவுடன் அங்குள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவுகளை வழங்கினர்.இந்நிகழ்வில் பெல் காவல் ஆய்வாளர் கமலவேணி, துவாக்குடி காவல் ஆய்வாளர் ஈஸ்வரன், உதவி காவல் ஆய்வாளர்கள், காவலர்கள், ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சியாளர்கள், தேசிய அளவில் வெற்றி பெற்ற ரோலர் ஸ்கேட்டிங் வீரர்கள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision