திருச்சி மாவட்டத்தில் செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு பிரத்யேக கைப்பேசி - ஆட்சியர் தகவல்
திருச்சி மாவட்டத்தில் பார்வையற்றோர் மற்றும் வாய்பேச இயலாத செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கைப்பேசி 2020-21 நிதியாண்டு முதல் வழங்கப்பட உள்ளது. தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவாரசு தகவல் தெரிவித்துள்ளார்.
Advertisement
திருச்சி மாவட்டத்தில் பார்வையற்றோர் மற்றும் வாய்பேச இயலாத செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கைப்பேசி 2020-21 நிதியாண்டு முதல் வழங்கப்பட உள்ளது. கைப்பேசி பெற விரும்புவோர் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றவராகவும் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட இளங்கலை கல்வி (Under Graduate) கல்லூரியில் படிப்பராகவோ சுயதொழில் செய்பவராகவோ, வேலைவாய்ப்பற்றவராயின் கல்லூரியில் இளங்கலை (Under Graduate) வரை படித்து முடித்த பட்டதாரியாக இருத்தல் வேண்டும்.
Advertisement
மத்திய மற்றும் மாநில அரசு ஊழியராக இருத்தல் கூடாது.மேலே குறிப்பிட்ட தகுதிகள் கொண்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை (அனைத்து பக்கங்களும்), உணவுப் பொருள் வழங்கல் அட்டை (ரேசன் கார்டு), ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை (UDID Card) ஆகியவற்றின் நகல்கள், படிப்பவராயின் கல்லூரியிலிருந்து படிப்பதற்கான பெறப்பட்ட சான்று (Bonafide Certificate),
Advertisement
சுயதொழில் செய்பவராயின் கிராம நிர்வாக அலுவலரிடம் பெறப்பட்ட சுயதொழில் செய்வதற்கான சான்று, வேலைவாய்ப்பற்ற பட்டதாரியாயின் பட்டச்சான்றின் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் திருச்சிராப்பள்ளி கண்டோன்மெண்ட், மாவட்ட நீதிமன்ற வளாக பின்புறம் அமைந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் (18.01.2021-க்குள் நேரில் வந்து விண்ணப்பித்து பயனடையுமாறும், மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்: 0431-2412590-ல் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.