திருட்டு வழக்குளில் துரிதமாக புலன்விசாரணை - மாநகர காவல் ஆணையர் உத்தரவு

திருட்டு வழக்குளில் துரிதமாக புலன்விசாரணை - மாநகர காவல் ஆணையர் உத்தரவு

திருச்சி மாநகர ஆயுதப்படை திருமண மண்டபத்தில் செப்டம்பர் 2023 மாதாத்திற்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் காவல் துணை ஆணையர்கள் S.ரவிசந்திரன், தலைமையிடம், S.செல்வகுமார், தெற்கு, காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ஆயுதப்படை, காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்கள்.

இக்கூட்டத்தில், மாநகர காவல் ஆணையர் அவர்கள் பேசுகையில், பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் போதை மற்றும் புகையிலை பொருள்கள் விற்பனை ஏதும் நடைபெற வண்ணம் தீவிரமாக கண்காணிப்பு செய்தும், ஸ்பா என்ற பெயரில் இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் குற்றவாளிகள் மீதும், 

அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்தும், குற்றச்சம்பங்கள் ஏதும் நடைபெறாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், காவல் நிலையங்களில் பகல் மற்றும் இரவு ரோந்து அலுவல்களை தீவிரப்படுத்தவும் என தெரிவித்தார்.

மேலும் காவல் நிலையங்களில் பதிவாகி உள்ள திருட்டு வழக்குளை துரிதமாக புலன்விசாரணை செய்து, எதிரிகளை கைது, வழக்கு சொத்துக்களை மீட்க வேண்டும் எனவும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கொலை குற்ற வழக்குகள், அவை நிலுவையில் இருப்பதற்கான காரணங்கள் பற்றியும், குற்ற வழக்குகளின் தற்போதைய நிலை பற்றியும், வழக்குகளின் புலன்விசாரணையை உரிய காலத்திற்க்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய அறிவுரைகள் வழங்கினார்.

மேலும் சட்டம் ஒழுங்கை பேணிகாக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க ரோந்து பணிகளை அதிகப்படுத்தவும் காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து முதல்வரின் முகவரியில் பெறப்பட்ட புகார்கள், காவல்துறை இயக்குநர் அலுவக புகார் மனுக்கள் மற்றும் புகார் அளிக்கவரும் பொதுமக்களிடம் கணிவாக நடந்து கொண்டும், 

அவர்களிடமிருந்து நேரடியாக பெறப்படும் புகார் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் முறையாக விசாரணை செய்தும், வழக்கு பதிவு செய்ய முகாத்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யவும், இல்லையேல் புகார் மனுவிற்கு மனு ரசீது வழங்கி விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision